ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை தூர் வர கோரி குறைதீர் நாளில் மக்கள் பாதை அமைப்பினர் மனு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நிறைந்துள்ள சீமை கருவேல் மரங்களால் தண்ணீரை சேமிக்க இயலாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மே 28ல் முதல்வரின் தனிப்பிரிவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் யூ. நூருல் அமீன் மூலம் மனு அனுப்பப்பட்டது. மனுவில் கூறியுள்ளதாவது: கடும் குடிநீர் பஞ்சத்தை போக்க மழை காலத்திற்கு முன் கண்மாயை தூர்வாரி நீர் தேக்க ஆதாரத்தை அதிகரிக்க செய்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

இம்மனு ஜூலை 19ல் ஏற்கப்பட்டு சீரமைப்பு பணிக்கு மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டு பொது பணித் துறை மானியக் கோரிக்கையில் கண்மாய் பராமரிப்பு பணிக்கு ரூ.19 கோடி மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை , நிதி கிடைத்ததும் பணிகள் மேற்கொள்ள ப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply