74 வது ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி!

நியூயார்க்கில் நடைபெற இருக்கும் 74வது ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் சென்றடைந்தார். 75க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஐநா பொது கூட்டத்தில் பருவநிலை மாற்றம் குறித்த முக்கிய நிகழ்வு ஐநா பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது.

 

இதில் பிரதமர் நரேந்திர மோடி நான்காவது நபராக உரையாற்றுகிறார். இந்நிகழ்வை தொடர்ந்து சர்வதேச அளவிலான மருத்துவ காப்பீடு குறித்த நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக சர்வதேச அளவில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை எதிர்க்கும் நாடுகளின் தலைவர்களின் நிலைப்பாடு குறித்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

ஜோடன் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பிரான்ஸ் அதிபர் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே ஐநாவின் தலைமையகத்தில் தேசப்பிதா காந்தியின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள சூரியசக்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


Leave a Reply