ட்ரம்ப் ஆட்சிக்கு ஆதரவு கேட்ட மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி மீண்டும் அமைய ஆதரவளிக்குமாறு பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்திய வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி மீறிவிட்டதாக கூறியுள்ளார்.

அடுத்த நாட்டில் தேர்தலில் இந்தியா எப்போதும் கருத்து தெரிவித்தது இல்லை என்ற ஆனந்த் சர்மா அதிபர் தேர்தலில் பிரதமர் மோடி ஆதரவு கேட்டதன் மூலம் இந்தியாவிற்கு நீண்ட நாள் தொடரக்கூடிய கெடுதலை செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். ஹூஸ்டனில் 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஆதரவளிக்குமாறு பேசினார்.


Leave a Reply