தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு

பட்டுக்கோட்டையில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு நடைபெற்றது.

 

முன்னதாக மாநாடு பட்டுக்கோட்டை வடசேரி ரோடு விபிஎஸ் திருமண அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தில் கேப்டன் அமல்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.பொதுச் செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு உரை நிகழ்த்தினார்கள்.

 

மாநாட்டில் தமிழ் அமைப்புகள் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கங்கள் போன்றவற்றில் இருந்து ஏராளமான தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தேசிய ஊடக செயலாளர் விடுதலை மறவன் தீர்மான உரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது:-

மரபுசாரா மாற்று எரிசக்திகள் வலையை இழுக்க கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே தமிழகத்தை குறிவைத்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனும் வெவ்வேறு பெயர்களில் தமிழகத்தில் மணி வளத்தை சுரண்ட நினைக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு துணைபோகும் ஆட்சியாளர்களை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

 

புதிய கல்விக் கொள்கை திட்டம்2019 எனும் பெயரில் மக்களை பிரித்தாளும் மத்திய அரசு நவீன குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இதனை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

 
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கைவிட்டு மாநிலப் கட்டிகளுக்கு கல்விக் கொள்கையை கொண்டுவர தேவைப்பட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்துவது என இம்மாநாடு முடிவு செய்கிறது.

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைக்கும் வண்ணம் நீட் ஆசிரியர்களை அலைகழிக்கும் டெட் தேர்வுகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கல்வித் துறையை, பாசிசப் கோமாளித்தனங்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

ஒரே நாடு ஒரே மொழி ஒரே குடும்ப அட்டை போன்ற இந்தியத் துணைக் கண்டத்தில் பன்முகத் தன்மைக்கு எதிராக ஒற்றைத் தன்மையை கொண்டுவர முயற்சிக்கும் இச்செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக கடும் கண்டனத்தை தெரிவித்து கேட்டுக்கொள்கிறோம்.

 

முடிவில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மொழி அமுதன் நன்றி கூறினார்.


Leave a Reply