திருவாடானையில் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சின்ன கீரமங்கலத்தில் பெய்த மழைக்கு சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது குழந்தைகளை கூட்டிக்கொண்டு வேறு வீட்டில் தஞ்சமடடையும் அவலநிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் சாக்கடை நீருடன் இப்பகுதியில் சிலர் தங்களது வீடுகளில் செப்டிக் டேங் கழிவுகளை நேரடியாக சாக்கடை கால்வாயில் விட்டுவிடுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் சிலர் ஆக்கிரமித்து அடைத்து விட்டதால் கழிவுநீர், மழை நீரும் செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதற்கு துரித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் தங்களது ரேஷன் கார்டு ஆதார் அட்டை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரிவித்தார்கள்.


Leave a Reply