விக்ரவண்டி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு உண்டா..? விரக்தியில் தொண்டர்கள்…!

விக்ரவணடி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி என்று மாஜி அமைச்சர் பொன்முடி அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
விக்ரவண்டி தொகுதிக்கு போட்டியிடுவோர் விருப்ப மனு 23ம் தேதி அறிவாலாயத்தில் பெற்றுக்கொள்ளப்படும். 24ம் தேதி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் 24ம் தேதியே அறிவிக்கப்படுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று காலை(22.9.19) மாஜி அமைச்சர் பொன்முடி, மாவட்ட பொருளாளர் புகழேந்தியையும், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயச்சந்திரனையும் அழைத்தார். ஜெயசந்திரனிடம், நீ விட்டு கொடுத்துவிடு, விக்ரவண்டி இடைத் தேர்தல் தொகுதி வேட்பாளர் புகழேந்திதான் என்று பேசினார். ஜெயச்சந்திரனும் பெரிய இடத்து விவகாரம் நமக்கேன் வம்பு என்று பொன்முடி சொல்வதற்கெல்லாம் பூம்… பூம் மாடு மாதிரி தலையாட்டினார்.அடுத்த சில நிமிடங்களில் திமுக தலைவர் ஒப்புதல் இல்லாமல், மாஜி அமைச்சர் பொன்முடி, விக்ரவண்டிதொகுதி வேட்பாளராக புகழேந்தியை அறிவித்தார்.

புகழேந்தியிடம் பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு ரூ5000/- என ரூ15 லட்சம் மாஜி அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.

 

இன்று 23ம் தேதி அறிவாலாயத்தில் விருப்ப மனு பெற்றுக்கொள்வார்களா.. 24-ம் தேதி நேர்காணல் நடைபெறுமா..? என்று திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.

 

திமுக தலைமை விருப்ப மனு, நேர்காணல் என்று ஏன் டிராமா நடத்துகிறது என்று திமுக தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.


Leave a Reply