திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபடும் என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கக்கூடிய காமராஜர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த தொகுதியிலும் திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை களப்பணி ஆற்ற வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply