நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

சென்னையைச் சேர்ந்த குறும்பட நடிகை இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடபழனியில் இருந்த அந்த பெண் சனிக்கிழமை என்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அது பக்ருதீன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு மிரட்டி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

 

இதைத்தொடர்ந்து பக்ருதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தானும், நடிகையும் ஒன்றாக பழகி வந்ததாகவும் தன்னிடம் அவர் ஒன்றரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டு அதனை திருப்பி கேட்டதால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. புழல் காவல் நிலையத்தில் நடிகை மீது பக்ருதீன் பணமோசடி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் நடிகை அளித்த புகாரின் பேரில் வடபழனியில் அவர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply