டிக் டாக் மோகத்தால் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தடுப்பணையில் டிக்டாக் எடுத்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் தடுப்பணை ஒன்று உள்ளது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நண்பர்கள் நீரில் ஆடி பாடி அவரை டிக்டாக்வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தடுப்பணையில் இருந்து வந்த நீரின் வேகத்தால் கால் தவறிக் கீழே விழுந்த தினேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது பேரில் தீயணைப்பு துறையினர் தேசிய தேடிவந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு தினேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Leave a Reply