விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவடைவு!

சந்திரயான் 2 விக்ரம் லண்டன் ஆயுள் காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் அதனுடன் சிக்னலை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நிலவில் படிந்துள்ள நீண்ட நிழலால் நாசாவின் ஆர்பிட்டர் கேமராவால் விக்ரம் வேந்தரின் துல்லியமான படத்தை எடுக்க முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் மற்றொரு முறை மைக்கேல் சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தீவிர முயற்சி எடுத்து இலக்கின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற ஆண்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் இருந்து செப்டம்பர் 2-ஆம் தேதி திட்டமிட்டபடி பிரிந்தது இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.53 மணிக்கு நிலவில் விக்ரம் லாண்டரி தரையிறங்க செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். படிப்படியாக நிலவின் மேற்பரப்பை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் அவருடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது.

 

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சியை காண இஸ்ரோ மையத்திற்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இதனால் சற்று ஏமாற்றம் அடைந்தனர். எனினும் சந்திரயான் திட்டம் 95 சதவிகிதம் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளையும் ஆறுதல் படுத்தினார். செப்டம்பர் எட்டாம் தேதி விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை சந்திரயான்-2 உள்ள கேமரா கண்டுபிடித்ததை அடுத்து விக்ரம் ரஉடனான சிக்னலை புதுப்பித்து திட்டத்தை நூறு சதவிகிதம் வெற்றி அடையச் செய்யலாம் என்கின்ற நம்பிக்கை இஸ்ரோ விஞ்ஞானிகள் இடம் பிறந்தது.

 

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உதவியாக அமெரிக்காவின் நாசாவும் களமிறங்கியது. அதன் தொழில்நுட்பம் மூலம் ஹலோ மெசேஜ் அனுப்பி சிக்னலை பெற முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை நாசாவின் ஆர்பிட்டர் கேமராக்கள் பயன்படுத்தினாலும் அந்த இடத்தில் பதிந்துள்ள நீண்ட நிழல் ஆனால் துல்லியமாக படம் பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆயுட்காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது வரும் சனிக்கிழமை முதல் நிலவின் தென்பகுதியில் மைனஸ் 240 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் குளிர் நிலவும் என்பதால் விக்ரம் லேண்டரின் மின்னணு செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படும் அதற்குள் சிக்னல் புதுப்பிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply