கல்லூரி வாசலிலேயே மாணவர்களிடையே மோதல்!பொள்ளாச்சிக்கு சோதனைக்காலம் போல ?

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் பாலியல் விவகாரம் கொளுந்து விட்டு எரிந்தது.குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இவ்விவகாரம் கோவையை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக மக்களை பொங்கியெழச்செய்தது.

 

இந்த நிலையில் இன்று அதே பொள்ளாச்சியில் மேலும் ஒரு சம்பவம் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி – உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்களில் இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர்.இத்தனைக்கும் அந்த பகுதியில் மிகவும் பிரபலமான இரு தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் கல்லூரி வாசலிலேயே நடந்த இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் ரூட் தல யார் என்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் பட்டாக்கத்தியுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் நடைபெற்று காவல் துறையினர் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுடன் கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

இந்த நிலையில் சென்னையில் பரவி வந்த மாணவர்கள் மோதல் சம்பவம் கோவையிலும் பரவி வருவதை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட காவல் துறை பெரிய அளவில் பிரச்சினை உருவாவதற்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பொள்ளாச்சி பெண்கள் வன்கொடுமை விவகாரம்,போதைப்பொருட்களை பயன்படுத்திய கேரள மாணவர்கள் கைது என அடுத்தடுத்து பொள்ளாச்சி சமீப காலமாக சோதனைக்காலமாக உள்ள நிலையில் கல்லூரி வாசலிலேயே மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply