சிகரெட் வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை

கோவையில் பாரில் சிகரெட் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பார் மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காந்திபுரம் எதிரே உள்ள நேரு தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பாரில் கடந்த 15ஆம் தேதி மது அருந்திய இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார் .

 

ஆனால் சிகரெட்டின் விலை 15 ரூபாய் எனவும் கூடுதலாக 500 ரூபாய் வழங்கும்படியும் பாரு ஊழியர் கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது சமையல் செய்ய பயன்படுத்தும் கரண்டியால் தலையில் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சமையல் கரண்டியால் தாக்கியவர் மேலாளர்கள் ஊழியர்கள் கூறி கௌதம், பாபு என்கிற அவர்களை கைது செய்தனர் அடையாளம் தெரியாத இளைஞர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Leave a Reply