சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சேலம் ரயில் நிலையத்தில் இன்று பிற்பகல் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் வேண்டும் கடிதத்தில் ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

 

அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த கடிதம் வந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் ஒருபுறம் மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

சேலம் ரயில் நிலையத்தில் உள்ள ஐந்து நடை மேடைகளில் அங்கு அமர்ந்திருக்கும் பயணிகள் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகள் என தனித்தனியாக தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் உயில் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனையானது நடைபெற்றது.

 

இது மட்டுமல்லாமல் இனி சேலம் வழியாக வந்து செல்லக்கூடிய அனைத்து ரயில்களையும் சோதனையிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் இருந்தது. ஆனால் இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை தொடர்ச்சியாக சோதனையானது நடைபெற்று வருகிறது இதில் ஏற்கனவே இந்த கடிதத்தில் குறிப்பிட்டது போல மர்ம நபர் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர் யார் என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.


Leave a Reply