--- --:--:-- --

திமுக போராட்டம் ஒத்திவைப்பு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

download (1)

இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20-ஆம் தேதி திமுக அறிவித்துள்ள போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஐ சந்தித்த பிறகு மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். ஆளுநர் தன்னை சந்திக்க அழைத்ததாகவும் அதன் பேரில் ஆளுநரை சந்தித்ததாகவும் ஸ்டாலின் கூறினார்.

 

அப்போது மத்திய அரசு இந்தியை திணிக்காதே என்று ஆளுநர் உறுதி அளித்ததால் வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக முக ஸ்டாலின் கூறினார். இருபதாம் தேதி திமுக ஏன் போராட்டம் நடத்துகிறது என்பதை ஆளுநருடன் ஸ்டாலின் விளக்கியுள்ளார். நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் அதனால் மத்திய அரசு இந்தியை திணிக்காதே என்று ஆளுநர் நம்பிக்கை கூறியுள்ளார்.

 

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த இந்தி மொழி அவசியம் என்று அமைச்சு அண்மையில் பேசி இருந்தார். எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்ட திமுக என்றும் எதிர்க்கும் என்று முகஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon