கள்ளக்காதலுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலத்தில் கள்ள காதலனை அடித்து துரத்திவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியுள்ள இந்த ஆறு பேரும் செய்துள்ள குற்றம் சேலம் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனியாக இருந்த காதல் ஜோடியை தாக்கிவிட்டு வனத்தில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசார் இவர்களை கைது செய்தது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் சேர்ந்த 25 வயதான தினேஷ் திருமணமானவர். அதே பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைபார்க்கும் திருமணமான 30 வயது பெண்ணுடன் தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் பைக்கில் ஆத்தூர் அருகே நெய்யமலை காப்புக்காடு வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

அங்கு அடிவாரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு அவர்கள் இருவரும் வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 6 பேர் கொண்ட கும்பல் அடிவாரப் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த பைக்கின் டேங்க் அவரை சோதனையிட்டனர். அப்போது வனப்பகுதியில் தனிமையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவரது கள்ளக்காதலியும் வெளியே வந்துள்ளனர் .உடனே தினேஷை மிரட்டி அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அப்போது அவருடன் வந்த பெண் தினேஷை விட்டுவிடுங்கள் என்று அந்த கும்பலிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் மீண்டும் தினேஷை சரமாரியாக தாக்கிய அந்த ஆறு பேரும் அவரை அடித்து துரத்தி விட்டு அந்தப் பெண்ணை மட்டும் வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்தப் பெண் என்னை விட்டு விடுங்கள் இனிமேல் இங்கு வரமாட்டேன் என்று கதறி அழுதுள்ளார். ஆனால் அவரின் குரலை சட்டை செய்யாது அந்த கும்பல் அவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அடிவாரத்தில் தாக்குதலுக்கு உள்ளானதில் அந்தப் பகுதியில் சென்றவர்களிடம் நடந்த விபரங்களைக் கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். பொதுமக்கள் வருவதை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

 

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி சூரியமூர்த்தி நேரில் விசாரணை நடத்த எஸ்பி தீபா கணிகர் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர் வெறும் சம்பவம் தொடர்பாக கொலைமுயற்சி துன்புறுத்தல் கற்பழிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த விவரங்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வாழப்பாடி ஏத்தாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

 

மேலும் காட்டு பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் இவர்கள் வாழப்பாடி அருகே உள்ள அழகேசன், சேதுபதி, வெங்கடாசலம், கோகுல் ஆகியோர் என்பது தெரிய வந்தது. விசாரணையில் சிக்கிய கும்பல் தான் பெண்ணை வனப்பகுதியில் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.


Leave a Reply