நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மீது புகார்!

ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மும்பையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாகசெய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சந்தேகம் எழுந்து அவரை அழைத்து விசாரித்த போது அவரின் முகமும் தேர்வு எழுதியவரின் முகமும் வேறாக இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

 

அந்த மாணவர் தொடர்பான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சுகாதாரத் துறை இயக்குநருக்கு அனுப்பி உள்ளதாகவும் மேலும் காவல் நிலையத்தில் புகார் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply