வினாத்தாள் இணையத்தில் கசிவு – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மொபைல் செயலியில் காலாண்டு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அண்மையில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மொபைல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 

நேற்று முன்தினம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பிற்கான வணிகவியல் வினாத்தாள் மொபைல் செயலியில் வெளியாவதாகவும்,அதேபோன்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்திற்கான வினாத்தாள் ஆகியவை தேர்வு நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பே வெளியானதாக கூறப்படுகிறது. இதில் பழைய வினாத்தாள்களும் வெளியாவதால் அதனை நம்பி செல்லும் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply