கொண்டாட அழைக்கவில்லை; தமிழை காக்கப் போராட அழைக்கிறேன்…!

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று திமுகவின் 70 ஆவது அகவை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் கொண்டாட அழைக்கவில்லை என்றும் தமிழ் மொழியை காக்க போராட்டத்திற்கு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

 

1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சி பொறுப்பை ஏற்றதும் இந்திய ஆதிக்கத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்தினார் என்பது ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார் .பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் குஜராத்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதை தெரிவித்துள்ள ஸ்டாலின் அவர்கள் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் அது அவர்களை இயக்குகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டம் என தெரிவித்துள்ளார்.

 

தமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான் என்றும் யாருக்கும் தாழவும் மாட்டான் எனவும் மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அணிவகுப்போம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விழுவது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் எனக்கூறி முக ஸ்டாலின் தனது கடிதத்தை முடித்துள்ளார்.


Leave a Reply