இந்தி திணிப்பு முயற்சியை திமுக ஒரு போதும் அனுமதிக்காது

இந்தித் திணிப்பு முயற்சியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையிலுள்ள கலைஞர் திடலில் முப்பெரும் விழா நடைபெற்றது.

 

அதில் பேசிய ஸ்டாலின் ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் பிறந்தநாளன்று செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது முதலில் தீர்த்த நிறுவனங்களின் பெயரை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

 

திமுகவின் சாதனைகளை சொல்ல டைட்டில் பார்க் மட்டும் போதும் என கூறிய அவர் தன் கருணாநிதியை பார்ப்பது மட்டுமே பொறாமை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காக வைக்கும் பேனர் வெறுப்பை சம்பாதித்து விட கூடாது என்று மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply