--- --:--:-- --

ஆட்டோ திருடுபோனதால் உயிரை மாய்த்துகொண்ட ஆட்டோ உரிமையாளர்

Capture

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆட்டோ திருடு போனதால் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் அயனாவரத்தில் ஏடிஎம் வாசலில் நிறுத்தப்பட்ட இவரது ஆட்டோ திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

 

பின்னர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ஆட்டோவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர் வியாசர்பாடியை சேர்ந்த ஒருவர்தான் திருடியதாகவும் அவரிடமிருந்து ஆட்டோவை மீட்டுத் தரும்படியும் போலீசிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களில் வெளி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வாகன காப்பீடு மூலம் புதிய முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் புகார் அளித்தும் ஆட்டோவை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்காதது ராஜேஷ் தற்கொலைக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

ஆட்டோ திருடு போனதால் வருமானத்தை இழந்த ராஜேஷ் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டதாகவும் இதுவே அவரது தற்கொலைக்கு காரணம் என்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியுள்ளனர். ஆட்டோவிற்கு காப்பீடு இல்லை என்றால் அபராதம் விதித்து எப்ஐஆர் கொடுத்திருந்தால் ராஜேஷ் தற்கொலை செய்திருக்க மாட்டார் எனவும் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் எனவும்., ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon