1800 கோடி ரூபாய் மதிப்பில் தெலங்கானாவின் “புதிய திருப்பதி”

சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் மலைமீது உருவாகிவரும் தெலுங்கானாவின் திருப்பதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானா விற்கு சென்றாலும் திருப்பதி, ஸ்ரீசைலம், காலகஸ்தி உள்ளிட்ட பல புகழ்பெற்ற செல்வ வளம் மிகுந்த கோவில்கள் ஆந்திர மாநிலத்தில் சென்றுவிட்டது.

 

எனவே தெலுங்கானாவிலும் புகழ்பெற்ற ஆன்மீக தளங்களை உருவாக்கும் நோக்கத்தில் 2014 ஆம் ஆண்டு யாதகிரி கோட்டையில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவிலை மேம்படுத்த உத்தரவிட்டார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். புவனகிரி மாவட்டத்தில் சுமார் 1800 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் தெலுங்கானாவின் திருப்பதியாக உருவாகி வருகிறது.

 

இந்த குகை கோவில் 1000 ஆண்டுகள் வரை சேதம் அடையாத வகையில் கிரானைட் கற்கள் ஆந்திராவின் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு சுமார் 4 ஏக்கர் பரப்பில் இந்த கோவில் வளாகம் தயாராகி வருகிறது.
ஏற்கனவே இந்த கோவிலின் தூண்களில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் முகங்கள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. திரைப்பட இயக்குனர் கோவிலுக்கான கட்டுமான திட்டத்தை வடிவமைத்து இருக்கிறார்.

 

மகாபலிபுரத்தை சேர்ந்த சுமார் 500 சிற்பிகள் சிற்பங்களை வடிவமைத்து கொண்டிருக்கின்றனர். திருப்பதியை போன்றே மலைப்பகுதியில் இந்த கோவில் அமைந்திருப்பதால் எங்கும் ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் தெலுங்கானாவின் திருப்பதிக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்ல சிறப்பு சாலை வசதிகள் ரயில் வசதிகளும் ஏற்பாடாகி கொண்டிருக்கிறது.

 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவந்த அத்திவரதரை காண திருப்பதியை விட பக்தர்கள் கூட்டம் அலை மோதியது போல அடுத்த ஆண்டு இந்த பணிகள் முடிவடைந்த பிறகு தெலுங்கானாவின் திருப்பதிக்கும் பக்தர்கள் படையெடுப்பார்கள் என்ற எண்ணம் எழுந்துள்ளது.


Leave a Reply