--- --:--:-- --

மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

Capture

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை போரூரை அடுத்த சுபஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநரான செந்தில். இவரது மூத்த மகன் தீனா எம்ஜிஆர் நகர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

 

இவர்களில் வீட்டிற்கு பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி பணிக்காக பள்ளம் தோண்டி அதனை மூடாமல் விட்டதுடன் மின்சார வயர்களை சரிசெய்யாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே நடந்து சென்ற சிறுவன் தீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் அதீனா உயிரிழந்ததாகவும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் துயரத்தோடு போரூர் கிண்டி நெடுஞ்சாலையில் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றது இடத்தை தீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon