20 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மொத்தமா போய்டுச்சே!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வங்கியில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 35 சவரன் நகை 45 ஆயிரம் ரொக்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆம்பூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் தனது வீட்டிலிருந்து நேதாஜி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் பகுதிக்கு வந்து அந்த வகையில் அவருடைய பணம் 50,000 ரூபாயை எடுத்துக் கொண்டு மற்றொரு வங்கியான கனரா வங்கிக்கு சென்றுள்ளார்.

 

அங்கே அவர் 20 ரூபாய் தாளை கீழே போட்டுவிட்டு அவரை நூதன முறையில் ஏமாற்றி அவரின் வங்கி கணக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட 45 ஆயிரம் ரூபாயும் மற்றும் அவர் தனது வங்கி லாக்கரில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட 35 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கிக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை கனரா வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே செல்வதற்காக இறங்கியுள்ளார்.

 

அப்போது அந்த மர்மநபர் 20 ரூபாய் போன்ற காலை கீழே போட்டு விட்டு உங்களது பணம் கீழே விழுந்துள்ளது அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் போது அந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.


Leave a Reply