ஆந்திர முன்னாள் சபாநாயகர் சிவபிரசாத் மறைவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல்
ஆந்திர மாநில முன்னாள் சபாநாயகர் சிவ பிரசாத் ராவ் தற்கொலை செய்து கொண்டார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது சபாநாயகராக இருந்த சிவபிரசாத் ராவ் தனது ஹைதராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்பே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிவ பிரசாத் ராவ் மற்றும் குடும்பத்தினர் மீது ஜெகன்மோகன் ரெட்டி அரசு பல வழக்குகள் தொடுத்து இருந்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது .சிவ பிரசாத்தின் மறைவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




