10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான இரண்டு தாள்கள் ஒரே தாளாக மாற்றப்பட்டு இருப்பதால் தற்போது திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 13ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் போல மொழித்தாள்கள் இரண்டு தாள்களாக நடத்தப்பட்ட தேர்வு ஒரே தாளக மாற்றப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.

 

அதனடிப்படையில் இந்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிக் கல்வித் துறையை பொறுத்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே பொது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திலேயே அதற்கான அட்டவணையை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அதை ஒரே தாளக்கப்பட்ட பிறகு அதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 27ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன ஏப்ரல் 13ஆம் தேதி முடிவடையும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.


Leave a Reply