காலாண்டு விடுமுறையின்போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என வெளியான தகவல்கள் தவறானவை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்படும் காலாண்டு தேர்வு வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து வரும் அக்டோபர் 3ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் அந்த நாட்களிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக அந்த நாட்களில் நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்தும் அட்டவணை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதில் காந்தி கருத்துக்களை மையமாகக் கொண்டு நாடகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் தூய்மை இந்தியா, விழிப்புணர்வு, பேரணி, சொற்பொழிவு, பட்டிமன்றம் போன்றவை நடத்த அறிவுறுத்தப்பட்டது தெரிவிக்கப்பட்டிருந்தது.தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை ரத்து என்ற தகவல்கள் அனைத்தும் தவறானவை என அரசு விளக்கம் அளித்துள்ளது .ஆனால் பள்ளி கல்வித் துறை சார்பாக காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு செயல்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உண்மை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்வு காலாண்டு விடுமுறை என்பது எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






