இராமநாதபுரத்தில் முதன்முதலில் எஸ்.இன்போடெக் ஐடி நிறுவனம் !

இராமநாதபுரத்தில் படித்த பட்டதாரிகள் 500 பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக எஸ்.இன்போடெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் திறக்கப் பட்டுள்ளது, இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக ஐடி நிறுவனமான எஸ்.இன்போ டெக் தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனம் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில் நுட்பம், தீ தடுப்பு உபகரணங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாடு, ஜவுளி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் எல்லை விரித்துள்ள சிராஜ் குரூப் பிரைவேட் லிமிடெட்., அதன் குழும நிறுவனமான எஸ் இன்போடெக் திறக்கப்பட்டது.

நிறுவனத்தின் சேர்மன் சாகுல்ஹமீது, மேலாண்மை இயக்குனர் டாக்டர் முகம்மது யூசுப்அலி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பின்தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் 500 பேருக்கு வேலை தர தற்போது நேர்க்கானல் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகிறோம்.

இன்னும் தொடர்ந்து மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மேலும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் இயற்கை சார்ந்த பல தொழில்களை தொடங்க உள்ளோம். தற்போது இங்குள்ள இளைஞர்கள் சென்னை, பெங்களூரு சென்று சம்பாதிக்கும் பணத்தை வெளியூரில் தங்குவதற்கும் உணவுக்குமே செலவு செய்ய வேண்டியநிலையை மாற்றி நம் மாவட்டத்தில் சென்னை பெங்களூருக்கு இணையான வேலையை தரவேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கி உள்ளோம், என்றனர்.


Leave a Reply