கோவையில் பணத்திற்காக 6 மாதத்திற்கு முன் கடத்தப்பட்ட இளைஞர் மேட்டுப்பாளையத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காக்கா சாவடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 6 மாதங்களுக்கு முன் மாயமானதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சுந்தரராஜன், பழனிவேல், ஈஸ்வரன் ரவுடி கும்பலை கைது செய்து விசாரித்ததில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அதில் மாரிமுத்து ஆடம்பரமாக வாழ்ந்ததை பார்த்து அவரை ஆறு மாதங்களுக்கு முன் கடத்தியதாகவும் அப்போது பணம் கேட்டு கடுமையாக தாக்கியதில் எதிர்பாராதவிதமாக மாரிமுத்து உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர் .மேலும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மாரிமுத்து உடலை குமரன் குன்று பகுதியில் புதைத்து விட்டதாகவும் ரவுடிகள் வாக்குமூலம் அளித்தனர் .இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 11 நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.






