ஜீவசமாதி அடைய போவதாக கூறிய சாமியார் மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்திருந்த சாமியார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 12ஆம் தேதி பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த இருளப்ப சுவாமி ஜீவசமாதி அடைய போவதாக அறிவித்திருந்தார். இதனை ஏராளமான பொதுமக்கள் காண வருகை தந்ததால் அங்கு பந்தல் மற்றும் மின் விளக்குகள் அமைத்து விழா போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

 

ஆனால் செப்டம்பர் 13-ம் தேதி காலை திடீரென சாமியார் இருளப்பர் தனது ஜீவ சமாதி முடிவை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் ஜீவசமாதி அடையும் நிகழ்விற்காக பந்தல் அமைத்து தமக்கு இதுவரை குறிப்பிட்ட தொகையை வழங்கவில்லை என பந்தல் அமைத்தவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இருளப்ப சுவாமி யார் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் என பண மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply