மதங்களை கடந்து மனிதநேயம் காத்த இஸ்லாமியர்கள்

குஜராத் மாநிலம் அம்ரேலி மாநிலத்திலுள்ள ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 3 நபர்கள் பிராமணர் வகுப்பை சேர்ந்த ஒருவரோடு இறுதி சடங்குகளை இந்து முறைப்படி நடத்தி அவரை நல்லடக்கம் செய்தனர். குரேஷியும், பாலு சங்கர் பாண்டேவும் கூலித் தொழிலாளிகள். இந்த இரண்டு பேருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டது என்று அறிமுகம் காலப்போக்கில் நட்பாக மாறி கிட்டத்தட்ட 40 வருடங்களாக ஒருவருக்கொருவர் உயிருக்குயிரான நண்பர்களாய் இருந்து வந்தனர்.

 

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக பாண்டேவுக்கு கால் முறிந்துவிட்டது. பாண்டேவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு உறவினர்கள் இல்லாத காரணத்தால் குரேஷி தன்னுடைய வீட்டில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்து உதவியுள்ளார். இதன்மூலம் நண்பர்களையும் ஒரே வீட்டில் வாழத் தொடங்கினர். இதையடுத்து குரேஷி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். இதனால் பாண்டே மிகவும் மனமுடைந்து போனார்.

 

சுரேஷுக்கு அபு, நசீர், சுகர் என மூன்று மகன்கள். கூலிவேலை செய்யும் இவர்கள் ஒரு தீவிர இஸ்லாமிய குடும்பத்தின.ர் ஐந்து வேளை தொழுகை கடமைகளை செய்து வருபவர் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது இறை நம்பிக்கையோடு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிப்பது என எல்லா விஷயங்களையும் கடைபிடித்து வந்தனர். குடும்பமே அல்லாமல் அவர் வீட்டில் தங்கியிருந்த பாண்டேவுக்கு இது ஒரு புது உலகமாக இருந்தது.தனது நண்பன் குரேஷி இல்லாத குறையை யாரும் நினைக்காத அளவிற்கு இவர் அந்த குடும்பத்திற்கு உதவி வந்துள்ளார்.

 

இந்த சமயத்தில் திடீரென உடல்நலக் குறைவால் பாண்டேவும் உயிரிழந்துள்ளார். இவருக்கு இறுதி சடங்குகளை செய்யும் பொறுப்பு குறையின் குடும்பத்தினருக்கு சென்றுள்ளது. ஆகவேதான் பாண்டேவை அவரது மத நம்பிக்கையோடு இறுதி சடங்குகளை செய்ய தீர்மானித்து அதற்கான முறையான இந்து மத அடிப்படையில் அவரது சடங்குகளை செய்து முடித்திருக்கிறது குடும்பம். இந்த நிகழ்வு குறித்து குரேஷி என் மகன் நசீர் எங்கள் குழந்தைகள் எல்லாம் பாண்டேவை உறவுமுறை வைத்த தாத்தா என்று தான் அழைப்பார்கள் என்றும் அவர் மனைவி கூட அவர் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது வீட்டில் நடக்கும் இஸ்லாமிய பண்டிகைகளில் முழு மனசோடு பாடும் கலந்துகொள்வார் என்றும், அந்த பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கு மறக்காமல் பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பதும் நிகழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

 

இதுகுறித்து குரேஷி கூறுகையில் வாண்டுமாமா படுக்கையில் முடியாமல் இருந்த போது அவரது இறுதி சடங்குகளை நடத்த முடிவு செய்தோம். இதற்காக ஒரு இந்து குடும்பத்தில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்ததாகவும் அதுமட்டுமல்லாமல் அவர் உயிரிழந்ததை அடுத்து பிராமண குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விதமாக சடங்குகளையும் செய்தோம் என்றும் அதன்பின் ஊர்க்காரர்கள் உதவியோடு நாங்களே அவர்களின் சடலத்தை தூக்கி சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தோம் என்றும் விளக்கியுள்ளனர்.


Leave a Reply