ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்துள்ள பார்த்திபனுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அனுப்பியுள்ள பாராட்டுக் கடிதத்தை டுவிட்டரில் பார்த்திபன் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தைக் காட்டும் பார்த்து சிரிப்பு படத்தின் மூலம் உச்சத்தை தொட்டு இருப்பதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துவதாக முன் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஒத்த செருப்பு திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என நடிகர் பார்த்திபன் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து இருந்த நிலையில் அவரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை உச்ச மகிழ்ச்சி எனக்கு ஒரு பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.