மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த நளினி பரோல் முடிந்து மீண்டும் வேலூர் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் 28 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ஜூலை மாதம் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
ஜூலை 25ஆம் தேதி பரோலில் வெளிவந்த நளினி வேலூரில் உள்ள கட்சி பிரமுகர் வீட்டில் தங்கியிருந்தார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தனது பரோலை மீண்டும் நீட்டிக்க கோரி நளினி மனு தாக்கல் செய்ததை அடுத்து அவருக்கு மேலும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. மொத்தம் 51 நாட்கள் பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பலத்த பாதுகாப்போடு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
நளினியின் தாய் பத்மா, சகோதரி கல்யாணி ஆகியோர் நளினியை கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர் .வெளிநாட்டில் படிக்கும் நளினி முருகன் தம்பதியின் மகளால் இந்தப் அருள் காலத்தில் இந்தியா வரமுடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.






