மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விசேஷங்களில் கணினி, மொபைல் ஆப் என ஹைடெக் முறையில் நோய் வசூலிக்கப்படுகிறது. காதுகுத்து, கல்யாணம் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலும் மொய் முக்கிய இடம் பிடிக்கும் மொய் எழுதி எண்ணி கணக்கு ஒப்படைப்பது என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சவாலாகவே இருக்கும்.
இந்த சிரமங்களை தவிர்க்கும் விதமாக மதுரை வட்டாரத்தில் புதிய மொய் முறை பறந்து வருகிறது. மொய் டெக் என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் மிக எளிதாக மொழி கணக்கிடப்படுகிறது. வருவோரின் தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்து அந்த இடத்திலே சம்பந்தப்பட்டவருக்கு ரசீதும் தரப்பட்டு வருகிறது. பணம் வசூலிப்பதில் இருந்து கணக்கு ஒப்படைப்பது வரை அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாகும்.
இதற்கு கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் கூடுதல் சிறப்பாக நிகழ்ச்சி நடத்துபவரின் செல்போனில் ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து விட்டால் எவ்வளவு மொய் வந்திருக்கிறது யார் யார் எவ்வளவு செய்து உள்ளனர் என்ற தகவலை உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம். அந்த மொபைல் எண்ணை பயன்படுத்தி எப்பொழுது வேண்டுமானாலும் மொய் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த விவரங்கள் மீண்டும் மொய் செய்யும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இதனை பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த புதிய நடைமுறை மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பிரபலமாகி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஸ்வைப் மெஷின்களை வைத்து மொய் பெற்ற இதே மதுரை தான் இன்று ஆண்ட்ராய்ட் ஆப்புகளை அறிமுகம் செய்து இருக்கிறது.