--- --:--:-- --

விதிமீறல் பேனரை கண்காணிக்க ரோந்து வாகனம்!

Capture

சென்னையில் விதிமீறல் விளம்பர பதாகைகள் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டத்திற்குப் புறம்பாக விளம்பர பதாகைகள் பேனர்களை அமைப்பு மீது ஓர் ஆண்டு சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 3964 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு 245 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனுமதியின்றி அமைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை கண்காணித்து அகற்ற ஏதுவாக சென்னை மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து வட்டாரத்திற்கு ஒரு வாகனம் வீதம் தனி அலைபேசி எண்ணுடன் கூடிய மூன்று ரோந்து வாகனங்கள் இன்று முதல் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனே செல்வர் என்றும் விதிமீறல்களை வீடியோ பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon