பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 130 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பாராட்டும் வகையில் காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் இந்த ஆண்டு காவல்துறையின் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல் நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர்களை வரையிலான பார்த்து அலுவலர்களுக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல ஊர்காவல் படையில் மண்டல தளபதி முதல் தலைவர் வரையிலான ஐந்து அலுவலர்களுக்கும், விரல்ரேகை பிரிவு இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தடய அறிவியல் துறையில் இரண்டு பேருக்கும் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது .

 

தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான காவல் பதக்கம் மணல் திருட்டை தடுக்கும் போது உயிர்நீத்த ஜெகதீஷ் துரை என்பவர் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply