உறவினர்களின் எதிர்ப்பை மீறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கரம் பிடித்த மணமகன்

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை உறவினர்கள் நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு தர மாப்பிள்ளை காவல் நிலையம் சென்ற அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் திட்ட சமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் ரோஜா பிரியா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணங்களில் சென்பாக்கம் விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

 

இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். இதையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்று தெரிந்தே திருமண முடிவு செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நிறுத்த கூறுகிறார் என்ற பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்றும் தான் விரும்பியவரை திருமணம் செய்வதாகவும் கூறினார். மணமகனுக்கு திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்யக்கூடாது என்று மணமகன் வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

 

இதை எடுத்து ரோஜாவை பதிவு திருமணம் செய்து கொள்வதாக கூறி எழுதி கொடுத்துவிட்டு மணமகள் வீட்டு உடனே ரவி சென்றுவிட்டார் .ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது உறவுகளை எதிர்த்த மணமகளின் செய்ய பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.


Leave a Reply