அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து: தமிழக அரசு ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு அளிக்க முன் வந்திருக்கும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ் எனப்படும் சிறப்பு அந்தஸ்து அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டுமென முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 

அரசு மற்றும் தனியார் நடத்திவரும் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது அண்ணா பல்கலைகழகமும் இந்த அந்தஸ்தை பெற தேர்வு செய்யப்பட்டாலும் தமிழக அரசின் குறித்த பதில் கிடைக்காததால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அந்தஸ்து யுஜிசி ஏடிசி போன்ற அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக இயங்க வழிவகுக்கும் என்பதால் தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Leave a Reply