கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதே குழந்தையின் தொடைப்பகுதியில் ஊசி முறிந்த விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க ஊரக சுகாதாரத் துறை இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் எம் எஸ் ஆர் புரத்தை சேர்ந்த பிரபாகரனின் மனைவி மலர்விழி. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த நாள் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தொடர்ந்த வீக்கம் அதிகரிப்பதை பரிசோதித்த மலர்விழி ஓசியில் நுனிப்பகுதி 18 நாட்களாக தொடைப்பகுதியில் இருப்பதை கண்டு உடனே அதை அகற்றினார்.
இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக ஊரக சுகாதாரத் துறை இயக்குனர் இரண்டு வாரங்களில் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.