100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்

தமிழகத்தில் நேற்று நான்கு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் மற்ற இடங்களில் மிதமான அளவில் வெயில் நிலவியது.

 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி மதுரை தெற்கு பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம், மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில் வேலூர், கடலூர், சிவகங்கை, நெல்லை, தேனி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Leave a Reply