ரயில் தண்டவாளத்தில் ஆண், பெண், குழந்தை சடலங்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேரின் சடலங்களை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த ராமகிருஷ்ணபதி கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை ஆண் பெண் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை ஆகிய 3 பேரின் சடலங்கள் காயங்களுடன் சிதைந்த நிலையில் கிடந்தன.

 

இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடம் வந்து சடலங்களை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அப்போது உயிரிழந்த 3 பேரின் ஆண்., பெண், குழந்தையின் பெற்றோர் ஆக இருக்கலாம் என முடிவுக்கு வந்தனர். குழந்தையின் கையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து அதற்கு அடையாளமாக பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது.

 

இதனால் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து இருக்கலாம் என கருதி அவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவமனைகளின் தொடர்பு கொண்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன் வந்து அந்த ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது ரயிலின் படிக்கட்டு பகுதியில் பயணித்த போது தவறி விழுந்து அடிபட்டு இருந்தார்களா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply