சாலை விதிகள் மீறப்படும் விவகாரத்தில் மத்திய அரசு கொண்டுவந்த அபராத தொகையை மாநில அரசுகள் குறைப்பது தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசியவர் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் அலட்சியம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
அதன் காரணமாகவே விபத்துக்கள் அதிகரிப்பதாகவே அவர் தெரிவித்தார். சாலை விதிகளை பின்பற்ற வைப்பதில் கடுமையான அணுகுமுறை பின்பற்ற வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்ட நிதின்கட்கரி அப்போதுதான் விபத்துகளின் எண்ணிக்கை குறையும் எனவும் கூறினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில் உள்ள சாலை விதி மீறலுக்கான அபராத தொகையை அப்படியே ஏற்காமல் அதில் மாநில அரசுகள் மாற்றங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த நிதின்கட்கரி விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் கிழக்கு என்றும் கூறினார்.