ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திலும் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை செய்கிறது. ப சிதம்பரத்தின் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்தவர் கே வி பெருமாள்.
ப சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும் நிலையில் சிபிஐ உதவியாளர் பெருமாளிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. உதவியாளராக பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறார் அந்தவகையில் இந்த விசாரணையை தொடங்கி இருக்கிறது. டெல்லியில் வசித்து வரும் பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டு அமைப்புகளும் விசாரணை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய போது கார்த்திக் சிதம்பரத்துடன் பெருமாள் தொடர்பில் இருந்தார் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அந்நிய முதலீடு சம்பந்தப்பட்ட முறைகேடுகளை சரி செய்வதற்காக பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி லஞ்சம் அளித்தார்கள் என்றும் அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் இந்த முறைகேடுகளை சரிசெய்து ஒப்பந்தம் செய்யும்படி அனுமதி அளித்தார் என்றும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் நிதி அமைச்சராக ப சிதம்பரம் பணி செய்த போது அவருக்கு உதவியாளராக இருந்த பெருமாள் என்பவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தவிர அப்போது அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த வேறு சில பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி நிதி அமைச்சகத்துக்கு வந்தார்களா அவர்கள் அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தை அங்கேயோ அல்லது வேறு எங்கேயோ சந்தித்தார்களா அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது யார் இதன் பின்னணி என்ன என்பது குறித்து தொடர்ந்து பெருமாளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. வேறு யாரேனும் இந்த முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இன்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.






