எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரூ.21.2 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. பெங்களூரு, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

 

அதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கரடிக்கல் வரையிலான 6.4 கிலோ மீட்டர் நிலைத்திருக்க சாலையில் பதினோரு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது நான்கு வழி சாலையில் இருந்து எய்ம்ஸ் இடையிலான 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கரடிக்கல் சாலை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Leave a Reply