ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டம்!

ஐ‌என்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

அதில் காவலில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் விவரங்கள் வாக்குமூலம் அடிப்படையிலான விவரங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. ஐ‌என்எக்ஸ் முறைகேடு புகாரில் கைதான ப சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் உள்ளார். தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையோ குற்றப்பத்திரிகையை இல்லை என ப சிதம்பரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஐ‌என்எக்ஸ் மீடியா, அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலையில் கடைசி கையெழுத்து போட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர் சார்பில் குடும்பத்தினரை பதிவிட கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி வெளியிடப்பட்ட பதிவில் ஐஎன்எக்ஸ் மீடியா அன்னிய முதலீடு விவகாரத்தை பரிசீலித்து தனக்கு பரிந்துரைத்த ஒரு டஜன் அதிகாரிகள் கைது செய்யப்படாதது ஏன் என பலர் தன்னிடம் கேட்டதாக கூறினார்.

 

கடைசியில் அதற்காக தன்னை கைது செய்தார்களா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை விரும்பவில்லை என்றும் ப சிதம்பரம் கூறியுள்ளார்.


Leave a Reply