கல்வியில் எந்த மாநிலமும் எட்ட முடியாத இடத்தை தமிழகம் பிடித்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் கரூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் 8 ஆண்டுகளாக 50 லட்சம் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கி வருவதாக கூறினார். கரூரில் காவிரி ஆற்றில் 500 கோடி மதிப்புள்ள கதவணை அமைக்க முதல்வர் நிதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
500 கோடி மதிப்புள்ள கதவணை அ.மைக்க முதல்வர் நிதி அளித்துள்ளார் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்





