ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அங்கு மிக குறைந்த அளவு உணவை உட்கொள்வதால் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறை எண் 7 இல் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் நேற்றிரவு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ரொட்டி மற்றும் அரிசி சோறு ஆகியவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொண்டதாகவும், காலையிலும் குறைந்த அளவு சிற்றுண்டி அருந்தியதாக கூறப்படுகிறது.
திகார் சிறையில் மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் அதேநேரத்தில் தொலைக்காட்சியை பார்க்கவும்., நாளிதழ்களில் வாசிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் மேற்கத்திய கழிவறை மட்டுமே தவிர வேறு எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.