கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜ.ம.எ.க தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

 

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கார்த்தீஸ்வரன் ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி மின் மோட்டார் ஸ்விட்ச் போட சென்ற போது மின்சாரம் பாய்ந்து மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது.

அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியரின் மெத்தன போக்கை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. இனி வரும் காலங்களில் இது போண்ற ஆபாத்தான வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுத்துகிறது .

 

மாணவர் கார்த்தீஸ்வரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு,மாணவன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள ஆசிரியரை நிரந்தர பணியில் இருந்து உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் உயிரிழந்த கார்த்தீஸ்ரன் குடும்பத்திற்கு இழப்பிடு 20 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Leave a Reply