மதுரையில் தனியார் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார்.
இன்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி முன்கூட்டியே சென்ற மாணவி அர்ச்சனா வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.
மாணவியின் உடலை போலீசார் விரைந்து எடுத்து செல்ல தாமதமான காரணத்தினால் உறவினர்களை எடுத்து செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக மாணவி பள்ளிக்கு வராத நிலையில் இன்று முன்கூட்டியே வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் வீட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.