விளையாட்டிற்கான எதிர்காலம் தமிழ்நாட்டு சிறப்பாக உள்ளதாக பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் இன்று சென்னை திரும்பினார்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் அவரை சந்திக்க உள்ளதாக கூறினார் .ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அதற்காக முயற்சிப்பேன் எனவும் இளவேனில் தெரிவித்தார்.






