--- --:--:-- --

மெட்ரோ ரயில் தனியார்மயமாக்கப்பட்ட விவகாரம்!

Untitled-2 copy

சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க பட்டுள்ள விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று விவாதிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில்வேயில் உள்ள ஒன்பது ரயில் நிலையங்கள் கடந்த ஆகஸ்ட் 31 நள்ளிரவு முதல் முழுவதுமாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

அதாவது மொத்தம் உள்ள 32 ரயில் நிலையங்களில் அண்ணா டவர், அண்ணா நகர் கிழக்கு, கீழ்பாக்கம் தேனாம்பேட்டை உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்குபவர்கள், ரயில் இயக்குபவர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் என அவர்களது பணிகளை மொத்தமாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள பராமரிப்பு பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் நிர்வாகம் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். இது இங்கு வேலை செய்யக்கூடிய 250 நிரந்தரப் பணியாளர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய வாழ்வாதாரங்கள் என்னவாகும் என்ற மிகப் பெரிய கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள்.

 

அதுதொடர்பாக இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்று மாலை மெட்ரோ நிரந்தர பணியாளர் சங்கத்தினர் ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். எந்த மாதிரியான கேள்விகளை முன் வைக்கலாம் எந்த மாதிரியான கோரிக்கைகளை முன் வைக்கலாம் என அலசிகொண்டு இருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் நடத்துவார்களா? அல்லது வேலைநிறுத்தத்தை அறிவிப்பார்களா? என்று முடிவு தெரியவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon